RNI No TNTAM/25/A3928

திருப்பூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயக் திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டுதிருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற பகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலும் இன்று வெளியாகி உள்ளது இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 9,44,178 பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 10,10,853 மூன்றாம் பாலினத்தவர்கள் 252 மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 19,55,283 திருப்பூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது

தமிழ்நாட்டின், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்! அதன்படி:- தமிழ்நாட்டில் உள்ள ஆண் வாக்காளர்கள் – 2,77,38,925 பெண் வாக்காளர்கள் – 2,89,60,838 மூன்றாம் பாலினம் – 7,617 மொத்த வாக்காளர்கள் – 5,67,07,380 18 மற்றும் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் – 12.51 லட்சம் மாற்றுத்திறனாளிகள் – 4.63 லட்சம் 85 வயதுக்கு மேற்பட்டோர் – 3.99 லட்சம் நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 74,07,207 அதிக வாக்காளர்களை கொண்ட […]

ஆண் காட்டு யானை உயிரிழப்பு

ஆண் காட்டு யானை உயிரிழப்பு திருமூர்த்தி அணை, தளி பிரிவு,உடுமலைப்பேட்டை வனச்சரகம், திருப்பூர் வனக்கோட்டம். சம்பவ விவரம்:21.02.2026 அன்று காலை சுமார் 7.30 மணியளவில், வழக்கமான ரோந்துப் பணியின் போது, திருமூர்த்தி அணை பகுதியில் ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடப்பதை வனப்பணியாளர்கள் கண்டறிந்தனர். உயிரிழந்த யானைக்கு சுமார் 8 வயது இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. உடற்கூறாய்வு:யானை இறப்பு தணிக்கை கட்டமைப்பின் (EDAF) நிலையான வழிகாட்டுதல்களின்படி, திருப்பூர் ஆனைமலை புலிகள் காப்பக (ATR) துணை இயக்குனர் […]

நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு

*பழுதான கைப்பேசி விற்பனை: ரூ.48,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!*கைப்பேசி விற்பனையில் ஏற்பட்ட சேவைக் குறைபாடு காரணமாக, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.48,000 நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.தூத்துக்குடியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர், உள்ளூர் கைப்பேசிக் கடை ஒன்றில் ரூ. 28,000 மதிப்பிலான கைப்பேசி ஒன்றை வாங்கினார். வாங்கிய சில நாட்களிலேயே அந்த கைப்பேசி பழுதானது. இது குறித்து கடைக்காரரிடம் கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்காமல் சேவை […]

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம் திறப்பு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம் திறப்பு. மதுரை: ரூ.213 கோடியில் கோரிப்பாளையம் உயர்மட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுதந்திரப்போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். சிவகங்கை சூரக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலையை மதுரையிலிருந்து காணொளி மூலம் திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

போலீஸ் பொதுமக்கள் பொதுநல சங்கம் மனு அதிரடி நடவடிக்கை

நன்றி தெரிவிப்பு ; போலீஸ் பொதுமக்கள் பொதுநல சங்கம் சார்பில் சென்னை நேதாஜி நகரில் அமைந்துள்ள ஒன்றாவது தெரு இரண்டாவது தெரு பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று போலீஸ் பொதுமக்கள் பொதுநல சங்கம் சார்பில் கோரிக்கை மனு தரப்பட்டது எங்கள் கோரிக்கையை ஏற்று பழுதான சாலையை உடனடியாக சீர் செய்து தந்த உயர்திரு சென்னை மாநகராட்சி 4 வது மண்டலக் குழு தலைவர் மற்றும் 38 வது மாமன்ற உறுப்பினர் திரு கணேசன் அவர்களுக்கு […]

எரிந்த நிலையில் பெண் பிணம்

நகராட்சி சின்டெக்ஸ் தொட்டி அருகே 90% எரிந்த நிலையில் பெண் பிணம்தாராபுரம் 5 சாலை சந்திப்பில் பரபரப்பு – போலீசார் தீவிர விசாரணை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 5 சாலை சந்திப்பு பகுதியில் பழைய கோட்டைமேட்டு தெருவில், கிருஸ்துவர் கல்லறை அருகே உள்ள நகராட்சி சின்டெக்ஸ் டேங்க் தொட்டி அருகில், 90 சதவீதம் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் பிணம் ஒன்று கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும், தாராபுரம் காவல் துணை […]

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 60% கூலி உயர்வை வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்தவருக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி TNCSC -தமிழ்நாடு சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் குளச்சல் மணிகண்டன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகளுடன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகதை முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் ரேஷன் பொருட்கள் […]

வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க கோரி திருப்பூர் மாவட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று கொண்டுள்ளது போராட்டம் இரண்டாவது நாளாக கருப்பு பட்ட அணிந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது