
தமிழ்நாட்டின், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!
அதன்படி:-
தமிழ்நாட்டில் உள்ள
ஆண் வாக்காளர்கள் – 2,77,38,925
பெண் வாக்காளர்கள் – 2,89,60,838
மூன்றாம் பாலினம் – 7,617
மொத்த வாக்காளர்கள் – 5,67,07,380
18 மற்றும் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் – 12.51 லட்சம்
மாற்றுத்திறனாளிகள் – 4.63 லட்சம்
85 வயதுக்கு மேற்பட்டோர் – 3.99 லட்சம்
நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 74,07,207
அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் – 5,36,991
குறைந்த வாக்காளர்களை கொண்ட சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் – 1,16,896
மேலும், 18 வயது நிரம்பியவர்கள் ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள்…
வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகம் அல்லது வாக்குச்சாவடி (BLO) நிலை அலுவலர் அல்லது இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
– தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி செய்திக்குறிப்பு வெளியீடு!