RNI No TNTAM/25/A3928

ஆண் காட்டு யானை உயிரிழப்பு

ஆண் காட்டு யானை உயிரிழப்பு


திருமூர்த்தி அணை, தளி பிரிவு,
உடுமலைப்பேட்டை வனச்சரகம், திருப்பூர் வனக்கோட்டம்.

சம்பவ விவரம்:
21.02.2026 அன்று காலை சுமார் 7.30 மணியளவில், வழக்கமான ரோந்துப் பணியின் போது, திருமூர்த்தி அணை பகுதியில் ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடப்பதை வனப்பணியாளர்கள் கண்டறிந்தனர். உயிரிழந்த யானைக்கு சுமார் 8 வயது இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

உடற்கூறாய்வு:
யானை இறப்பு தணிக்கை கட்டமைப்பின் (EDAF) நிலையான வழிகாட்டுதல்களின்படி, திருப்பூர் ஆனைமலை புலிகள் காப்பக (ATR) துணை இயக்குனர் திரு. ராஜேஷ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், 21.02.2026 அன்று மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை உடற்கூறாய்வு நடைபெற்றது.

இந்த உடற்கூறாய்வு, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை உதவி மருத்துவர் (FVAS) டாக்டர் டி. மெய்யரசன், ஜல்லிபட்டி கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ஜே.கே. நாகராஜன் மற்றும் வாளவாடி கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் எம். ராமகிருஷ்ணன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வின் போது திருப்பூர் ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் திரு. சரவணன், உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் (கூடுதல் பொறுப்பு) திரு. டி. செந்தில்குமார், கோயம்புத்தூர் வனப்பகுதியினா் மற்றும் வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு (TNFWCCB) வனச்சரக அலுவலர் திரு. முருகன், உடுமலைப்பேட்டை வனச்சரகப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் உடனிருந்தனர்.

தற்காலிக இறப்புக்கான காரணம்:
உடற்கூறாய்வு முடிவுகள் மற்றும் உற்றுநோக்கல்களின் அடிப்படையில், யானை நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் (Asphyxia due to drowning) காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தற்காலிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நடைமுறைப்படி, யானையின் உடல் ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

வெளியீடு:
வனச்சரக அலுவலர்,
உடுமலைப்பேட்டை வனச்சரகம்.


அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…