உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை நிற தொட்டிகளில் வழங்க வேண்டும் – ஒரு வார காலக் கெடு விதிப்பு – தவறினால் அபராதம்;
*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை நிற தொட்டிகளில் வழங்க வேண்டும் – ஒரு வார காலக் கெடு விதிப்பு – தவறினால் அபராதம்; தரம் பிரிக்கப்படாத கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது!நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து தேநீரகங்கள் (Tea Shops), கஃபேக்கள் (Cafés), உணவகங்கள் (Restaurants) மற்றும் சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட உணவு விற்பனை நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் உருவாகும் […]
தேசிய மக்கள் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளராக தி. அறிவானந்தம் நியமனம்
தேசிய மக்கள் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளராக தி. அறிவானந்தம் நியமனம்சென்னை: தேசிய மக்கள் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் (FPSA) மாநில துணைப் பொதுச்செயலாளராக திரு. தி. அறிவானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து அவர் இன்று முதல் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். கழகத்தின் சார்பில் பொதுமக்களின் உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்களின் […]
அரியலூர்: மாணவர்களிடையே தமிழ் வாசிப்பை வளர்க்கும் நோக்கில் முற்போக்கு இலக்கியப் பேரவை சார்பில் மாதாந்திர கட்டுரைப் போட்டி அறிவிப்பு!
அரியலூர்: மாணவர்களிடையே தமிழ் வாசிப்பை வளர்க்கும் நோக்கில் முற்போக்கு இலக்கியப் பேரவை சார்பில் மாதாந்திர கட்டுரைப் போட்டி அறிவிப்பு! – நிறுவனர் பொறி. தி. அறிவானந்தம் தகவல்அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடம் தமிழ் மொழி பற்று, வாசிப்புத் திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில், முற்போக்கு இலக்கியப் பேரவையின் சார்பில் மாதம் தோறும் மாதாந்திர கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பு மாதத்திற்கான கட்டுரைப் போட்டி குறித்த அறிவிப்பை முற்போக்கு இலக்கியப் பேரவையின் […]
அரியலூர் – ஏழைகள் திருப்பதியான கலியுத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 2ம் சனிக்கிழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
அரியலூர் – ஏழைகள் திருப்பதியான கலியுத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 2ம் சனிக்கிழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் காலாண்டு விடுமுறை என்பதால் குவியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது இக்கோவில் ஏழைகளின் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்பட்டுவருகின்றது.இக்கோவில் அரியலூர் மட்டும் இல்லாமல் தஞ்சாவூர், சேலம், ஆத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கும்பகோணம்,கள்ளக்குறிச்சி, திட்டக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசித்திபெற்ற கோவில் ஆகும்.இந்நிலையில் இன்று புரட்டாசியில் 2ம் சனிக்கிழமை என்பதால் […]
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சிதலைவராக பொறுப்பேற்றதற்கு பெருமை கொள்கிறேன்!
செ.வெ.எண்: 592 நாள்: 14.09.2025விருதுநகர் மாவட்டம்26 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.—விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.09.2026) பொறுப்பேற்றுக்கொண்டார்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த பூமியான விருதுநகர் மாவட்டத்திற்கு 26-ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டமைக்காக பெருமை கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் […]
நெல்லை 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…
நெல்லையில் 12-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு சிறை தண்டனையும் விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2022-ம் ஆண்டு நெல்லையில் உள்ள பள்ளியில் பெயிண்டிங் வேலைக்காக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த முனீஸ்வரன் சென்றுள்ளார். அப்போது அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து […]
திருப்பூரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை, ரூ 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய AE சிக்கினார்
ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரியAE கையும் களவுமாக சிக்கினார்: திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை*திருப்பூரில் 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரியAE கையும் களவுமாக சிக்கினார்: திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை*திருப்பூரில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி மின் பொறியாளரை (AE) லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.*திருப்பூர் மின் பகிர்மான வட்டம், அவிநாசி கோட்டத்திற்குட்பட்ட தெக்கலூரில் (கிழக்கு) மின் வாரிய அலுவலகம் இயங்கி […]
ரேஷன் கடையில் அநாகரிக மிரட்டல்: அரிசி குறைப்பு, மொபைல் மெசேஜில் மோசடி – திருப்பூரில் பரபரப்பு!**
திருப்பூர், ஆக. 20:*ரேஷன் கடையில் அநாகரிக மிரட்டல்: அரிசி குறைப்பு, மொபைல் மெசேஜில் மோசடி – திருப்பூரில் பரபரப்பு!**திருப்பூர் அவினாசி சாலை காந்தி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நுகர்வோருக்கு உரிய அரிசியை வழங்காமல் முறைகேடு செய்ததோடு, தட்டிக்கேட்டவரை விற்பனையாளர் அநாகரிகமாக மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.*குறைத்து வழங்கப்பட்ட அரிசி:திருப்பூர் வளர்மதி கூட்டுறவு சொசைட்டிக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள குமார் நகர்-1 ரேஷன் கடையில் (எண்: 32 BB 0007 PN) நுகர்வோர் […]
தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்: தகவல் தெரிந்தால் போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டுகோள்?
தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்: தகவல் தெரிந்தால் போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டுகோள்நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையம்–கன்னியாகுமரி ரயில் நிலையம் இடையே, காரியமாணிக்கபுரம் அருகே தண்டவாளப் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து நாகர்கோவில் இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த 12ஆம் தேதி, நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து கன்னியாகுமரி மார்க்கத்தில் சுமார் 1.4 முதல் 1.5 கிலோமீட்டர் தொலைவில், காரியமாணிக்கபுரம் […]
விருதுநகர் மாவட்டம்80 -வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 256 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்!
செ.வெ.எண்:523 நாள்: 15.08.2026விருதுநகர் மாவட்டம்80 -வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 256 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.—இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று(15.08.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசியக் […]