திருப்பூர் மாநகரப் பகுதியில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட போதை பொருள் அழிப்பு
திருப்பூர் மாநகர காவல்துறை : பத்திரிக்கை குறிப்பு திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1.5 கோடி மதிப்புள்ள 299 கிலோ போதை பொருட்கள் அழிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 61 கஞ்சா வழக்குகளில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட மதிமயக்கும் போதை பொருட்களான சுமார் 1.5 கோடி மதிப்புள்ள 181 கிலோ […]
ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கு முதல் ஓராண்டுக்கான தொகுப்பூதியம் ரூ.6,250ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்ந்துள்ளது. கட்டுநர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,500ல் இருந்து ரூ.6,600 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கொடைக்கானல்: வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு ஆண்டுதோறும் இஸ்ரேலில் இருந்து பலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நிலையில், தற்போதைய வளைகுடா போர் சூழலால் அவர்கள் தங்கியுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
ரயிலில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம் உறுதி
📢 பயணிகளின் கவனத்திற்கு: ரயிலில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டால் இனி அபராதம் உறுதி! 🚨🎧 ரயில் பயணங்களின்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில், செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது மற்றும் சத்தமாகப் பேசுவது போன்ற செயல்களைத் தடுக்க இந்திய ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 🔹 சட்டப்படி குற்றம்: ரயிலில் மற்றவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அதிக சத்தமாகப் பாட்டு கேட்பவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் 145-வது பிரிவின் […]
ஊழல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
உயர்நீதிமன்றத்தால் பணித்தடை விதிக்கப்பட்ட ஊழல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? ஊழலும், மோசடியும் தான் திமுகவின் இரு கண்கள்!சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14.20 கி.மீ தொலைவுக்கு நான்கு வழி உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை திமுக அரசும், அதன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் எவ்வாறு ஏமாற்றி வருகிறார்கள் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும்.திருவான்மியூருக்கும், உத்தண்டிக்கும் இடையே ரூ.2100 கோடியில் உயர்மட்டச் […]
துணை நடிகையின் தந்தை படுகொலை 10 பேர் கைது
கொடைக்கானலில் துணை நடிகையின் தந்தையை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது திண்டுக்கல், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் செல்லும் வழியில் துணை நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தை சூரிய நாராயணனுக்கு சொந்தமான விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரியநாராயணன் படுகொலை செய்யப்பட்டு நகை மற்றும் பணம் மாயமாகியிருந்தன இது தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து மாவட்ட SP.பிரதீப் உத்தரவின் பேரில் கொடைக்கானல் DSP.யுவப்பிரியா மேற்பார்வையில் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில் சார்பு […]
த வெ க வினருக்கு கட்டுப்பாடு விதித்த புஸ்ஸி ஆனந்த்
தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது. பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் […]
மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடல் முழு அரசு மரியாதையுடன்நல்லடக்கம் செய்யப்படும்
மறைந்த தோழர் நல்லக்கண்ணுவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும். -முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு. நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் – “சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களைத்தூக்கினில் ஏற்றினாலும்விட்டுப்பிரியாது – செங்கொடிவீரம் குறையாது” என்று தோழர் ஜீவா முழங்கியதைப் போல […]
புதிய மாவட்ட வன அலுவலர் பொறுப்பேற்பு
கூடலூர் வனக்கோட்டத்தில் புதிய மாவட்ட வன அலுவலர் பொறுப்பேற்பு முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர் வனக்கோட்டம் ஆகியவற்றின் மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வந்தநா. வெங்கடேஷ் பிரபு, இ.வ.ப., அவர்கள் பணியிடை மாற்றம் பெற்றுகோவை வனக்கோட்டம் செல்ல உள்ளார். அவருக்கு பதிலாக, கூடலூர் வனக்கோட்டத்தின் புதிய மாவட்ட வன அலுவலராகப. தேவராஜ், இ.வ.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று (24.02.2026)கூடலூர் பகுதியில் உள்ள கூடலூர் வனக்கோட்ட அலுவலகத்தில்திரு. ப. தேவராஜ், இ.வ.ப., அவர்கள் அதிகாரப்பூர்வமாக […]
என் ஓட்டு விற்பனைக்கு அல்ல விழிப்புணர்வு பிரச்சாரம்
22.02.26 அன்று மாலை திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி பாண்டியன் நகர் பகுதியில் நமது பத்து ரூபாய் இயக்கம் மற்றும் அறப்போர் இயக்கம் இணைந்து நடத்திய என் ஓட்டு விற்பனைக்கு அல்ல துண்டறிக்கை விழிப்புணர்வு பிரசாரம் சிறப்பாக நடைபெற்றது இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டனர் மற்றும் பள்ளி மாணவர்களிடமும் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் உங்க பகுதியில் ஓட்டு விற்பனை அல்ல […]