RNI No TNTAM/25/A3928

திருப்பூர் மாநகரப் பகுதியில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட போதை பொருள் அழிப்பு

திருப்பூர் மாநகர காவல்துறை : பத்திரிக்கை குறிப்பு

திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1.5 கோடி மதிப்புள்ள 299 கிலோ போதை பொருட்கள் அழிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 61 கஞ்சா வழக்குகளில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட மதிமயக்கும் போதை பொருட்களான சுமார் 1.5 கோடி மதிப்புள்ள 181 கிலோ கஞ்சா, 118 கிலோ கஞ்சா சாக்லேட்கள் மற்றும் 2.5 கிராம் மெத்தபெட்டமைன் ஆகியவற்றை போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்கள் (பறிமுதல், சேமிப்பு, மாதிரி எடுத்தல் மற்றும் அகற்றல்) விதிகள்-2022-ன் படி இன்று 06.03.2026-ம் தேதி காலை 10.30 மணி முதல் 12.00 மணிவரை கோயம்புத்தூர், மதுக்கரை தாலுக்கா, செட்டிபாளையம் பகுதியில் இயங்கிவரும் கோவை பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் திருப்பூர் கஞ்சா அழிப்பு குழுவின் தலைவரும், திருப்பூர் மாநகர காவல் ஆணையருமாகிய திரு.சு.இராஜேந்திரன், இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு.ராஜராஜன், இ.கா.ப., மற்றும் கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் திரு.விஜயகுமார் ஆகியோர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டது.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…