சிபிஐ மதுரை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பால்பரபரப்பு
அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் புகாா் அளிக்கலாம்: மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியா்கள் லஞ்சம் கேட்டால் புகாா் அளிக்கலாம் என சிபிஐ மதுரை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரையில் இயங்கி வரும் மத்தியப்புலனாய்வுத்துறையின்(சிபிஐ) ஊழல் ஒழிப்புப் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் ஊழியா்கள் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டால், தனிப்பட்ட ஆதாயத்துக்காக தன்னுடைய அலுவலகப் பதவியை தவறாகப் பயன்படுத்தினால் வருமானத்துக்கு அதிகமாக […]
ராஜபாளையத்தில் ரகசிய விபச்சார விடுதி கண்டுபிடிப்பு: மூவர் கைது
இராஜபாளையத்தில் ரகசிய விபச்சார விடுதி கண்டுபிடிப்பு: மூவர் கைது, 5 பெண்கள் மீட்பு!*இராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவில் உள்ள வாடகை வீடு ஒன்றில் சட்டவிரோதமாக விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. P.K. பாண்டியம்மாள் தலைமையிலான போலீசார் நேற்று (23.05.2026) அதிரடி சோதனை நடத்தினர்.இச்சோதனையில், விபச்சார விடுதி நடத்திய அந்தோணி செல்வி (29), புரோக்கராக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தராஜ் (38) மற்றும் சின்ன கருப்பசாமி […]
தமிழக நகராட்சி துறை டென்டரில் அரசு ஊழியர்களுக்கு செக்….
தமிழக நகராட்சி துறை டெண்டரில் அரசு ஊழியர்களுக்கு செக்… அடியோடு ஒழிந்த லஞ்சம்?தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் நடைமுறைகளில் கொண்டுவந்துள்ள முக்கிய மாற்றங்களால் லஞ்சம் ஒழிந்திருப்பதாக பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விசிகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், அரசு டென்டரில் ஊழல் செய்வதற்காகவே தேவையற்ற அதிகாரத்துவம் உருவாக்கிய சைட் விசிட், இயந்திரச் சான்றிதழ் முறையை நகராட்சித்துறையில் ஒழித்த முதல்வர் விஜய்க்கு பாராட்டுக்கள். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் […]
அவிநாசியில் மாண்புமிகு கால்நடைத்துறை அமைச்சர் அவர்களுக்குத் திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு!
அவிநாசி:அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்கு இன்று வருகை தந்த மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்களுக்குக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.மாவட்டக் கழகச் செயலாளர் ஜிகே சங்கர் தலைமை:மாண்புமிகு அமைச்சர் அவர்களின் இந்த வருகையை ஒட்டி, திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஜிகே சங்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், நேரடி முன்னிலையிலும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொகுதிக்கு வருகை தந்த அமைச்சர் அவர்களுக்கு, மாவட்டக் கழகச் செயலாளர் ஜிகே சங்கர் […]
அதிரடிப் படை ஐஜியாக பவானீஸ்வரி ஐபிஎஸ் நியமனம்: சிங்கப் பெண்ணுக்கு குவியும் வாழ்த்துகள்!
தமிழக காவல் துறையில் அதிரடி மாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழக காவல் துறையின் முக்கியப் பிரிவான அதிரடிப் படையின் (STF) புதிய ஐஜியாக (Inspector General of Police) பவானீஸ்வரி ஐபிஎஸ் (Bhavaneeswari IPS) அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.காவல் துறையில் தனது துணிச்சலான செயல்பாடுகளாலும், நேர்மையான நிர்வாகத் திறனாலும் முத்திரை பதித்த பவானீஸ்வரி ஐபிஎஸ் அவர்களுக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.முக்கிய சிறப்பம்சங்கள்:சிங்கப் பெண்: […]
தவெகவிற்கென பிரத்யேக டிவி சேனல்…. முதல்வர் விஜயின் மாஸ்டர் பிளான்!
தவெகவிற்கென பிரத்யேக டி.வி. சேனல்.. முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்! வேலையை தொடங்கிய ஆதவ்தமிழக அரசியலில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று, புதிய ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழகம் (தவெக), அடுத்தடுத்த அதிரடி பாய்ச்சல்களுக்கு தயாராகி வருகிறது. மக்கள் மத்தியில் தங்களது கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், தவெக-விற்கென ஒரு பிரத்யேக தொலைக்காட்சி (டி.வி.) சேனலை உருவாக்குவதற்கான தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் மேல் மட்டத் தரப்பிலிருந்து […]
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி!
மக்கள் குறை தீர்ப்புகூட்டத்திற்கு வந்தபொதுமக்கள் கடும் அவதிவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் கெடுபிடி: மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி!விழுப்புரம்:தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்து, சுமார் ஒன்றரை மாத இடைவேளைக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது காவல்துறை மேற்கொண்ட அதீத பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கெடுபிடிகள் பொதுமக்கள் மத்தியில் […]
திண்டுக்கல் அருகே வடமாநில இளைஞரை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது
*திண்டுக்கல் அருகே வட மாநில இளைஞரை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது*திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி நாடக மேடை அருகே கடந்த மாதம் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விகாஸ்டிக்கா(30) என்பவர் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தவரை தாடிக்கொம்பு போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சையில் இருந்த விகாஸ்டிக்கா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்தனர்.இது […]
அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு; மாநகராட்சி பொது நிதியைப் பயன்படுத்த அனுமதி!
அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு; மாநகராட்சி பொது நிதியைப் பயன்படுத்த அனுமதி!சென்னை: தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களை உடனடியாகப் புதுப்பித்து, சீரமைக்க முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான செலவினங்களை உள்ளாட்சி அமைப்புகளின் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளவும் அவர் அனுமதி அளித்துள்ளார்.தமிழக மக்களின் பசியைப் போக்கும் உன்னத திட்டமான ‘அம்மா உணவகம்’, ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பெருமளவில் உதவி வருகிறது. கடந்த சில காலமாகப் போதிய பராமரிப்பின்றி […]
அனுபவமே ஆயுதம் முதல்வர் விஜயின் புத்திசாலித்தனமான தேர்வு….!!!!
தவெக அரசின் கஜானா சாவி செங்கோட்டையன் கைகளில்! அனுபவமே ஆயுதம் முதல்வர் விஜயின் புத்திசாலித்தனமான தேர்வு…!!!தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசின் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடுகள் வெளியான நிமிடத்திலிருந்தே, அரசியல் வட்டாரம் முழுவதும் விவாதங்களும் ஆர்வமும் எகிறிக்கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, கட்சியின் மிக மூத்த தலைவரும், பல தசாப்தகால ஆட்சி அனுபவம் கொண்டவருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கு மாநிலத்தின் நிதி நாடி என்று போற்றப்படும் நிதித்துறையும் ஓய்வூதியத் துறையும் ஒதுக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஒரே நேரத்தில் […]