RNI No TNTAM/25/A3928

ராஜபாளையத்தில் ரகசிய விபச்சார விடுதி கண்டுபிடிப்பு: மூவர் கைது

இராஜபாளையத்தில் ரகசிய விபச்சார விடுதி கண்டுபிடிப்பு: மூவர் கைது, 5 பெண்கள் மீட்பு!*இராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவில் உள்ள வாடகை வீடு ஒன்றில் சட்டவிரோதமாக விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. P.K. பாண்டியம்மாள் தலைமையிலான போலீசார் நேற்று (23.05.2026) அதிரடி சோதனை நடத்தினர்.இச்சோதனையில், விபச்சார விடுதி நடத்திய அந்தோணி செல்வி (29), புரோக்கராக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தராஜ் (38) மற்றும் சின்ன கருப்பசாமி (38) ஆகிய 3 பேரை போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 1,500/- பறிமுதல் செய்யப்பட்டது. இக்குற்றத்தில் தொடர்புடைய மற்றொரு புரோக்கரான வைத்தியலிங்கம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலை பார்வை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் வெளியீட்டாளர் M. சரவணகுமார்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…