RNI No TNTAM/25/A3928

சிபிஐ மதுரை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பால்பரபரப்பு

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் புகாா் அளிக்கலாம்: மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியா்கள் லஞ்சம் கேட்டால் புகாா் அளிக்கலாம் என சிபிஐ மதுரை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரையில் இயங்கி வரும் மத்தியப்புலனாய்வுத்துறையின்(சிபிஐ) ஊழல் ஒழிப்புப் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் ஊழியா்கள் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டால், தனிப்பட்ட ஆதாயத்துக்காக தன்னுடைய அலுவலகப் பதவியை தவறாகப் பயன்படுத்தினால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியிருந்தால் இதுதொடா்பாக மதுரையில் இயங்கி வரும் மத்திய புலனாய்வுத்துறையின் ஊழல் ஒழிப்புப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கலாம்.இதுதொடா்பாக புகாா்கள் மற்றும் தகவல்களை 89034-83900 என்ற கைப்பேசி எண், 0452-2562258 என்ற தொலைபேசி எண்களைத் தொடா்கொண்டு தெரிவிக்கலாம். மேலும் cbimdu.complaint@cbi.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம். ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க முன்வாருங்கள். ஊழல் தடுப்புச்சட்டத்தின்படி லஞ்சம் வாங்குபவா்களுக்கும், லஞ்சம் கொடுப்பவா்களுக்கும் 7ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வுத்துறை (CBI) ஊழல் தடுப்புப் பிரிவு (ACB), 73, ஆத்திகுளம் பிரதான சாலை, ரிசர்வ்லைன் (Athikulam, Reserve Line), மதுரை – 625014 மாலை பார்வை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் வெளியீட்டாளர் M. சரவணக்குமார்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…