RNI No TNTAM/25/A3928

விருதுநகர் மாவட்டம்80 -வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 256 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்!

செ.வெ.எண்:523 நாள்: 15.08.2026விருதுநகர் மாவட்டம்80 -வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 256 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.—இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று(15.08.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளை நிற புறாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பறக்க விட்டார்.காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 55 காவலர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய 11 மாவட்ட நிலை அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமை, 20 ஆண்டுகள் விபத்தில்லா சேவை புரிந்தமைக்காக 5 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் 3 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சார்பில் 3 அலுவலர்களுக்கும், வனத்துறை சார்பில் 3 அலுவலர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 26 அலுவலர்களுக்கும், யுவ ஆப்த மித்ரா தன்னார்வலர்கள் 6 நபர்களுக்கும், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சார்பில் 1 அலுவலருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 19 அலுவலர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பில் 18 அலுவலர்களுக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் 1 அலுவலருக்கும், வேளாண்மைத்துறை சார்பில் 9 அலுவலர்களுக்கும், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை சார்பில் 7 அலுவலர்களுக்கும், சமூகநலத் துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் 1 அலுவலருக்கும், பதிவுத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், கரூவூலம் மற்றும் கணக்குத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 அலுவலர்களுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், கூட்டுறவுத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பொதுப்பணித்துறை சார்பில் 6 அலுவலர்களுக்கும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 அலுவலர்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 23 அலுவலர்களுக்கும், போக்குவரத்துத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துக்கழகம் (மதுரை) லிட், விருதுநகர் மண்டலம் சார்பில் 1 அலுவலருக்கும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், தொழில் வணிகத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சார்பில் 1 அலுவலருக்கும், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 1 அலுவலருக்கும், நீர்வளத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் 1 அலுவலருக்கும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 5 அலுவலர்களுக்கும், தாட்கோ சார்பில் 1 அலுவலருக்கும், பொது நூலகத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் லிமிடெட் சார்பில் 1 அலுவலருக்கும், கைத்தறித்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பேரூராட்சித்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் 3 அலுவலர்களுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் 1 அலுவலருக்கும், பொருளியல் மற்றும் புள்ளியல் துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், வணிகவரித்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் 2 அலுவலர்களுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் சார்பில் 2 அலுவலர்களுக்கும், சுதந்திர தின விழா பணிகளை சிறப்பாக செய்தமைக்கான நற்சான்றிதழ் 7 நபர்களுக்கும் என மொத்தம் 256 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திருவில்லிபுத்தூர் திரு.ரவீ மீனா,இ.வ.ப., திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) திருமதி வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு, சிப்காட்) திருமதி சசிகலா, மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) திரு.எம்.ராஜசேகர், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம்80 -வது…

செ.வெ.எண்:523 நாள்: 15.08.2026விருதுநகர் மாவட்டம்80 -வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை…

திருப்பூர் இன்ஸ்டாகிராம் காதல்…

காதல் காத்திருக்கும்… காத்திருக்காதது காதல் கிடையாது😡💔 திருப்பூரில் காதல் விவகாரம் தொடர்பான தகராறில் இளம் பெண் மற்றும் அவரது தாய்…