RNI No TNTAM/25/A3928

திருப்பூர் மாநகராட்சிக்கு பாராட்டு வாட்ஸ்அப் புகாருக்கு இரண்டு மணி நேரத்தில் நடவடிக்கை

*📰 செய்திக்குறிப்பு* *பத்து ரூபாய் இயக்கத்தின் வாட்ஸ்அப் புகாருக்கு 2 மணி நேரத்தில் நடவடிக்கை – கோயில் வழி பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றிய திருப்பூர் மாநகராட்சிக்கு பாராட்டு* *திருப்பூர், ஜூலை 28:* திருப்பூர் மாநகராட்சி மண்டலம்–3-க்கு உட்பட்ட கோயில் வழி பேருந்து நிலையத்தில், அங்குள்ள சில கடைக்காரர்கள் பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகளை தங்கள் கடைகளின் முன்பாக வைத்து ஆக்கிரமிப்பு செய்தும், பொதுமக்கள் நடந்து செல்லும் பொதுப் பாதையையும் பயன்படுத்த முடியாத வகையில் ஆக்கிரமித்து வந்ததாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.இதுகுறித்து பத்து ரூபாய் இயக்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு WhatsApp மூலம் புகார் அளிக்கப்பட்டது.அந்தப் புகாரைத் தொடர்ந்து, புகார் அளிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மிகத் துரிதமாக செயல்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பொதுப் பாதையையும், கடைகளின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நாற்காலிகளையும் அகற்றி, பொதுமக்கள் சுதந்திரமாக பயன்படுத்தும் வகையில் மீண்டும் ஒழுங்குபடுத்தியது.பொதுமக்களின் புகாரை உடனடியாக பரிசீலித்து, விரைவான நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாநகராட்சி ஆணையர், மண்டலம்–3 உதவி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் பத்து ரூபாய் இயக்கம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்படுகின்றன.பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி, அரசு நிர்வாகம் இவ்வாறு விரைந்து செயல்படுவது மக்கள் நம்பிக்கையை மேலும் உயர்த்தும் என்பதையும், இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் மீண்டும் நடைபெறாத வகையில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பத்து ரூபாய் இயக்கம் வலியுறுத்துகிறது. *இப்படிக்கு,* *மு. செல்லம்* *திருப்பூர் மாவட்ட* **செயலாளர்* **பத்து ரூபாய் இயக்கம்*

மாலை பார்வை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் & வெளியீட்டாளர் M. சரவணகுமார்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…