
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
POCSO வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – ரூ.30,000 அபராதம்
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 15.12.2019 அன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், எதிரி சிலம்பரசன் என்பவர் மீது POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை இராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று 10.08.2026 அன்று நீதிபதி திருமதி. தேன்மொழி அவர்கள் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.30,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டு, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.