
*தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை விரைவாக பெற புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம்!**’ஹாய்’ அனுப்பினால் போதும்**தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை விரைவாக பெற புதிய வாட்ஸ்அப் எண் 94450 30725 அறிமுகம்!**இந்த எண்ணுக்கு ‘ஹாய்’ என செய்தி அனுப்பினால் ‘புக் ஆம்புலன்ஸ்’ இணைப்பு கிடைக்கும்.**அதன் மூலம் நிகழ்நேர இருப்பிடத்தை கட்டுப்பாட்டு அறைக்கு பகிர முடியும்.**மேலும், ஆம்புலன்ஸ் எண், ஓட்டுநர் தொடர்பு, வரும் வழித்தடம் மற்றும் வருகை நேரம் போன்ற தகவல்களையும் கைப்பேசியில் உடனடியாக அறிந்து கொள்ளலாம்.*