
திருப்பூர்:பல்லடம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராம்குமார் அவர்கள் மீது மாற்றுக்கட்சியினர் திட்டமிட்டுப் பரப்பி வரும் பொய் செய்திகளுக்கும் அவதூறுகளுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜி.கே.சங்கர் அவர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்:நமது பல்லடம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராம்குமார் அவர்கள் மீது சில வஞ்சகம் பிடித்த நபர்கள் தொடர்ந்து பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். பொதுமக்கள் யாரும் தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். நமது எம்.எல்.ஏ அவர்கள் மக்களுக்கான சேவைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே நமது தளபதி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் மக்களுக்காக உழைக்க விடாமல் தடுப்பதற்காகவே மாற்றுக்கட்சியினர் இது போன்ற பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.சட்டப்பூர்வ நடவடிக்கை எச்சரிக்கை:எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பல்லடம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராம்குமார் அவர்கள் மீது மாற்றுக்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே வருகிறார்கள். இதை யாரும் சமூக வலைத்தளங்களில் நம்பிப் பகிர வேண்டாம். ஆதாரமில்லாமல் இது போன்ற அவதூறு அறிக்கைகளை முகநூல் (Facebook) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால், அவர்கள் மீது சட்டப்பூர்வமாக மானநஷ்ட வழக்கு பதிவு செய்யப்படும். எனவே, இத்தகைய செயல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.பத்திரிக்கை நண்பர்களுக்கு வேண்டுகோள்:ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பொய் செய்திகளைப் போட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உண்மை நிலவரத்தைத் தீர விசாரித்து, அதன் பின்பே செய்திகளைவோ அல்லது அறிக்கைகளையோ வெளியிட வேண்டும். பத்திரிக்கை தர்மத்தைக் காப்பாற்றும் வகையில் நேர்மையாகச் செயல்பட வேண்டும். யாரோ சொல்வதைக் கேட்டு தீர விசாரிக்காமல் இது போன்ற பொய் செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜி.கே.சங்கர் அவர்கள் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.