RNI No TNTAM/25/A3928

பரோட்டா சாப்பிட்ட சட்டக் கல்லூரி மாணவர் மர்ம மரணம் போலீசார் விசாரணை!

*தூத்துக்குடியில் புரோட்டா சாப்பிட்ட சட்டக்கல்லூரி மாணவர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை!*தூத்துக்குடியில் உணவகத்தில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிய சட்டக்கல்லூரி மாணவர், மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் எஸ்.ஜே. ஜெகன் என்பவரது மகன் பிரபாகர் (23). இவர் தூத்துக்குடியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் மாணவராகப் படித்து வந்தார். கடந்த 7-ம் தேதி இரவு, பிரபாகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் புரோட்டா வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, இரவு வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் பிரபாகர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், உள்ளே சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பிரபாகர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.தகவலறிந்து வந்த வடபாகம் போலீசார், பிரபாகரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபாகர் சாப்பிட்ட புரோட்டாவினால் ஏற்பட்ட உணவு நஞ்சாதல் காரணமாக உயிரிழந்தாரா? அல்லது அவருக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு அல்லது அலர்ஜி இருந்ததா? என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மாணவரின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டக்கல்லூரி மாணவர் திடீரென உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…