



*திருப்பூர் மாவட்ட காவல்துறை**தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு குறித்து காவல்துறையினரின் கொடி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது* . வருகின்ற 04.05.2026 ஆம் தேதி, நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்படுவதையடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி *திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. யாதவ் கிரிஷ் அசோக், இ.கா.ப., அவர்களின் உத்தரவு படி* திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்ட மற்றும் சட்டமன்ற தொகுதிகளிலும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினரின் கொடி அடையாள அணிவகுப்பு இன்று (02.05.2026) நடத்தப்பட்டது.