RNI No TNTAM/25/A3928

தவறை தட்டி கேட்டது தவறா? பயணியை அடித்து உதைத்த அரசு பஸ் டிரைவர் கண்டக்டர் அராஜகம்

தவறை தட்டி கேட்டது தவறா? மனைவி, மகள் கண் முன் பயணியை அடித்து அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் அராஜகம்இலவச டீ, வடைக்கு ஆசைப்பட்டு தரமற்ற கடையில் நிறுத்துவதா என கேள்வி எழுப்பிய பயணியை மனைவி, மகள் கண் முன்னே அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.திருப்பூரில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பஸ் தென்னிலை அருகே நெடுஞ்சாலை ஓரம் இருந்த கடையில் நிறுத்தி இருக்கின்றனர். அங்கு டிரைவர், கண்டக்டருக்கு டீ, வடை இலவசம் என்பதால் நிறுத்தி உள்ளனர். அந்த கடையில் டீ ஒன்று 25 ரூபாய் என கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறது. இதனை கண்டு பஸ்சில் மகள், மனைவியுடன் பயணித்த பயணி ஒருவர் ஆத்திரம் அடைந்தார்.டீ 15 ரூபாய்க்கு விற்பனையாகும் கடையில் நிறுத்தாமல் ஏன் அதிக தொகைக்கு விற்பனையாகும் கடையில் நிறுத்துகிறீர்கள்? உங்களுக்கு இலவசமாக டீ, வடை வழங்குவதால் தரமற்ற பொருட்களை அதிக விலைக்கு விற்கும் கடையில் பஸ் நிறுத்துவீர்களா? அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் இடம் பயணி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.இதையடுத்து பயணியை அவரது குடும்பத்தினர், மனைவி மகள் முன்னிலையில் டிரைவர், கண்டக்டர் சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் அடிக்காதீங்க… அண்ணா … அடிக்காதீங்கன்னு மகள், மனைவி கெஞ்சும் காட்சி இடம்பெற்றுள்ளது. குடும்பத்தினர் கண் முன்னே, பயணியை சரமாரியாக தாக்கிய டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…