RNI No TNTAM/25/A3928

பத்திரிக்கையாளரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு கண்டனம் வலிக்கிறது

‎பத்திரிகையாளரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு கண்டனங்கள் வலுக்கிறது

‎♦️ஜனநாயகத்தின் 4 தூண்கள் சட்டமன்றம் (Legislature), நிர்வாகத்துறை (Executive), நீதித்துறை (Judiciary), மற்றும் ஊடகங்கள் (Media/Press) ஆகும். இவை நாட்டின் சட்டங்களை இயற்ற, நடைமுறைப்படுத்த, நீதியை நிலைநாட்ட மற்றும் மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்க உதவுகின்றன.
‎
‎♦️சட்டமன்றம்:
‎நாட்டின் சட்டங்களை உருவாக்குகிறது.
‎♦️நிர்வாகத்துறை:
‎சட்டங்களை நடைமுறைப்படுத்தி, நாட்டை நிர்வகிக்கிறது (பிரதமர், ஜனாதிபதி, அமைச்சரவை).
‎♦️நீதித்துறை:
‎அரசியலமைப்பைப் பாதுகாத்து. சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்கிறது.
‎♦️ஊடகங்கள்: அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு, தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்குத் தெரிவிக்கின்றன.
‎
‎♦️இவை 4-ம் சுதந்திரமாக செயல்படும் போதுதான் ஜனநாயகம் உண்மையான பலனைப் பெறுகிறது.
‎
‎
‎🔶ஜனநாயகத்தின் 4 ஆம் தூணான பத்திரிகையாளர்கள் ஊடக நண்பர்கள் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று செய்தி சேகரிக்கச் சென்றுள்ளனர். போலீசாருக்கு அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே உரிமையும் கடமையும் அந்த பாதுகாப்பு தன்மையை மக்களுக்கு தெரியப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு உரிமை உள்ளது.
‎
‎🔶ஆனால் போலீசார் பத்திரிகையாளர்களைத் தடுத்து நிறுத்தியதோடு, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் மூத்த புகைப்படக் கலைஞர் மூர்த்தி என்பவரை மாநகரக் காவல் துறை துணை ஆணையர் (DCP) சிருஷ்டி சிங் ஒருமையில் பேசி அவமதித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சம்பந்தப்பட்ட துணை ஆணையர் தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல்வேறு பிரஸ் கிளப்கள் வலியுறுத்தியுள்ளது.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…