RNI No TNTAM/25/A3928

திமுக கூப்பன் கொடுப்பது சட்ட விரோதம் டிடிவி தினகரன் கண்டனம்

*🛑 திமுக கூப்பன் கொடுப்பது சட்டவிரோதம்: டிடிவி தினகரன் கண்டனம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை:தேர்தல் ஆணையத்தில் முறையான அனுமதி பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியையும், சட்டவிரோதமாகப் பரிசுப் பொருட்களையும் வீடுவீடாக சென்று விநியோகம் செய்ததோடு, தன் ஆதரவாளர்கள் மூலம் பெண் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசி அவரை தற்கொலை செய்யத் தூண்டிய மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் வாக்குறுதியை மடைமாற்றும் வகையிலும், திமுக அறிவித்த 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையிலும் தற்போது அதன் மாதிரியைத் தயாரித்து வீடு வீடாகச் சென்று திமுகவினர் விநியோகம் செய்து வருவது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, பெண் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை விநியோகம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…