
திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு
திருப்பூர் மாநகரம் – வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு,
(திருப்பூர் மாநகர & மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர்) பாதுகாப்பு நடவடிக்கை
குறித்து ஆய்வு செய்தது தொடர்பாக.
இன்று 09.04.2026ம் தேதி திருப்பூர் மாநகர & மாவட்ட தேர்தல்
மேற்பார்வையாளர் (காவல் துறை) திரு.ராகுல் ஹெக்டே, இ.கா.ப., அவர்கள்
மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 1)மத்திய, வீரபாண்டி, மங்கலம் மற்றும் 15
வேலம்பாளையம் காவல் நிலையங்கள், 2)பெரியாண்டிபாளையம்,
அணைபாளையம் மற்றும் நான்கு ரோடு சோதனைச்சாவடிகள், 3)அரசு மேல்நிலை
பள்ளி, பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளி(வீரபாண்டி), கதிரவன் மேல்நிலை
பள்ளி(செல்லம் நகர்), அரசு ஆரம்ப பள்ளி(மங்கலம்), அரசு நடுநிலை
பள்ளி(வேலம்பாளையம்) ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு சென்று, வரும் தமிழ்நாடு
சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு அங்கே மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு
பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு
செய்தார்கள். இந்த ஆய்வில் தேர்தல் மேற்பார்வையாளர் அவர்களுடன் (மத்திய,
வீரபாண்டி, மங்கலம் மற்றும் 15 வேலம்பாளையம்) காவல் ஆய்வாளர்கள் கலந்து
கொண்டார்கள்.