RNI No TNTAM/25/A3928

2கிலோ 400கிராம் கஞ்சா பறிமுதல் கோவை மாவட்ட காவல்துறை நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் 2 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் (23.03.2026) அன்று பேரூர் காவல் நிலைய காவல்துறையினர் குற்ற சம்பவம் நடக்காமல் கண்காணிக்க வேண்டி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ராமசெட்டிபாளையம் அருகில் சென்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் சரவணன் (24) , பேரூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் விக்னேஷ் (22) மற்றும் மணிகண்டன் மகன் ஹரி ராகவேந்திரன் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…