RNI No TNTAM/25/A3928

விருதுநகரில் 14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

விருதுநகரில் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சூலக்கரை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையின் போது, நாகர்கோவில் நோக்கி சென்ற வாகனத்தில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.14.2 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நகைக்கு உரிய ஆவணங்கள் காட்டப்படாததால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…