

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு யாதவ் கிரிஷ் அசோக் அவர்களின் உத்தரவின்படி திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை வ ளாகத்தில் ஆயுதப்படை ஆளினர்கள் ஆளினர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நூலகமும் உடல் திறன் மற்றும் அறிவுக்கூர்மையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய காவலர் மன்றமும் அமைக்கப்பட்டது இன்று 14/03/26 மாவட்ட கண்காணிப்பாளர் திரு யாதவ் கிரிஷ் அசோக் அவர்கள் ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்ட காவலர் மன்றம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்தார்கள் மேலும் திருப்பூர் குமரன் மருத்துவமனையுடன் இணைந்து ஆயுதப்படை வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது இதில் ஆயுதப்படை காவல் ஆளி நர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர் மேலும் காவல் கண்காணிப்பாளர் பள்ளி குழந்தைகளுடன் போட்டி தேர்வுகள் உடற்கல்வியின் அவசியம் மற்றும் உடல்நலம் பற்றி கலந்துரையாடினார்