
திருப்பூரில் தாழ்வாக செல்லும் மின் ஒயர் குறித்து புகார் எதிரொலி அதிரடியாக மாற்றம்
உறக்கத்திலிருந்து விழித்த வெங்கமேடு மின்வாரியம்
புகாரின் எதிரோலி பல மாதங்களாக ஆபத்தான நிலையில நிலையிலிருந்த பழுதடைந்த மின்சார கம்பம் அதிரடியாக மாற்றம்
கைகளில் தொடும்படி இருந்த மின்சார கம்பிகள் வானம் நோக்கி சென்றன
புகாரளித்தால் தான் நடவடிக்கை கட்டுகதை எழுதும் வெங்கமேடு மின்வாரியம் இதற்கு என்ன கதையோ?
திருப்பூர் வெங்கமேடு மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட காளம்பாளையம் பகுதியில் முறைகேடாக தாறுமாறாக டி சி டபுள்யூ பணிகளை மேற்கொண்டதால் பழுதடைந்த கம்பங்களில் உயரழுத்த மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக ஆபத்தான நிலையில் செல்கின்றது தொடர்ச்சியாக புகாரளித்த பிறகும்கூட எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாமல் கண்டும் காணாமல் இருப்பதால் உயிர் சேதம் ஏற்பட அதிக அளவிலான வாய்ப்புள்ளாதால் போர்க்கால அடிப்படையில் விரைவாக உரிய தீர்வுகண்டு தாழ்வாக செல்கின்ற மின்சார கம்பிகளை சரிசெய்ய வேண்டுமென அவிநாசியில் நடைபெற்ற மாதாந்திர குறைகேட்பு கூட்டத்தில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் அளித்திருந்தார்.
அதன் எதிரோலியாக இன்று அவசர அவசரமாக பழுதடைந்து மிக ஆபத்தான நிலையிலுள்ள உயரழுத்த மின்சாரம் புதியதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அதே பகுதியிலிருந்த கைகளில் தொடும்டபடி இருந்த மின்சார கம்பிகளை இழுத்து உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இப்பகுதியிலுள்ள நுகர்வோர்கள் புகாரளித்த பிறகும்கூட கண்டும் காணாத நிலையிலிருந்த வெங்கமேடு மின்வாரியம் குறைகேட்பு கூட்டத்தில் புகாரளித்த நிலையில் திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி அவர்களின் உடனடி உத்தரவு காரணமாக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது நுகர்வோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.