வதந்தி பரப்பாதீர்கள்; பீதி ஏற்படுத்தாதீர்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள் தற்போது எல்பிஜி பற்றி நிறைய வதந்திகளும் உள்ளன. சிலர் பீதியை உருவாக்குகின்றனர். அவர்கள் அவ்வாறு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவர்கள் குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கிறார்கள்.போரினால் ஏற்பட்ட இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவும் எந்தவொரு முயற்சியையும் விட்டுவிடவில்லை. இதனைச் சமாளிக்க பல்வேறு நிலைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமீபத்தில், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடனும் இதுகுறித்து நான் விவாதித்தேன். விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகளை சமாளிக்க தொடர்ச்சியான முயற்சிகளும் நடந்து வருகின்றன._– பிரதமர் நரேந்திர மோடி_