RNI No TNTAM/25/A3928

உயர்ரக போதைப் பொருள் விற்பனை மதுவிலக்கு போலீசார் அதிரடி நடவடிக்கை

🚨 உயர் ரக போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.நாகர்கோவில் மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை

பிப்ரவரி 06 2026,

🌟 கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

🔶 இந்நிலையில் கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் தற்போது மயிலாடி அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் தாகூர் இன்னாசி என்பவரது மகன் தாமஸ் காட்வின்(44) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த அரிதான உயர்ரக போதை பொருளான மெத்தம் பேட்டமைன் – 04 கிராம், 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

🌟நாகர்கோவில் மதுவிலக்கு போலீசார் மேற்படி குற்றவாளியை கைது செய்தனர். குற்றத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

🌟 எந்தவிதமான பாரபட்சமும் இன்றி போதை பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…