
கொடைக்கானலில் துணை நடிகையின் தந்தையை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது
திண்டுக்கல், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் செல்லும் வழியில் துணை நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தை சூரிய நாராயணனுக்கு சொந்தமான விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரியநாராயணன் படுகொலை செய்யப்பட்டு நகை மற்றும் பணம் மாயமாகியிருந்தன இது தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து மாவட்ட SP.பிரதீப் உத்தரவின் பேரில் கொடைக்கானல் DSP.யுவப்பிரியா மேற்பார்வையில் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு அபினேஷ் மற்றும் தனிப் படைகள் அமைக்கப்பட்டு அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக ஷாம்குமார், கோகுல்நாத்,ரஞ்சித், கிருஷ்ணபிரசாத், அக்சய,கார்த்திக், விக்னேஷ், கிரிஷா, கிரண், ஆறுமுகம் ஆகிய 10 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.