RNI No TNTAM/25/A3928

நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு

*பழுதான கைப்பேசி விற்பனை: ரூ.48,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!*கைப்பேசி விற்பனையில் ஏற்பட்ட சேவைக் குறைபாடு காரணமாக, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.48,000 நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.தூத்துக்குடியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர், உள்ளூர் கைப்பேசிக் கடை ஒன்றில் ரூ. 28,000 மதிப்பிலான கைப்பேசி ஒன்றை வாங்கினார். வாங்கிய சில நாட்களிலேயே அந்த கைப்பேசி பழுதானது. இது குறித்து கடைக்காரரிடம் கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்காமல் சேவை மையத்தை அணுகுமாறு கூறியுள்ளார். சேவை மையத்தில் சரி செய்யப்பட்ட பின்பும், மீண்டும் அதே பழுது ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியதர்ஷினி, நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ. சங்கர் மற்றும் நமச்சிவாயம் ஆகியோர் அடங்கிய அமர்வு, கைப்பேசியின் அசல் விலை ரூ. 28,000, மன உளைச்சலுக்கான நஷ்டஈடு ரூ.10,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 10,000 ஆக மொத்தம் ரூ.48,000 தொகையை சம்பந்தப்பட்ட கடைக்காரர் வழங்க வேண்டும். தவறினால், இத்தொகைக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…