தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து 2026 தேர்தலுக்கான கூட் டணி தொடர்பாக ஆலோ சனை மேற்கொண்டார். இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழர் கட்சி என அனைத்து கட்சி களும் களப்பணிகளில் இறங்கி தீவிரமாகசெயல் பட்டு வருகின்றன. இதில் திமுக கூட்டணி ஏற்கெனவே அமைத்தி ருந்த கூட்டணி கட்சிக ளுடன் மீண்டும் கூட்டணி அமைத்து இறங்குவதால் வலுவாக காணப்படும் நிலையில், எதிரணியில் இருக்கும் அதிமுகவுடன் பாஜக மட்டுமே கூட்ட ணியில் இடம்பிடித்திருக் கிறது. வேறு எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்ட ணியை இதுவரை அறி விக்கவில்லை. அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையனை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் முயற்சிகளும் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. மறுபுறம் தேமுதிக, பாமகவை கூட்டணிக் குள் கொண்டுவரவும் முயறசிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே செங் கோட்டையன், தவெக வுடன் இணைய உள் ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக பாஜக தலைவர் நயி னார் நாகேந்திரன், திடீரென டெல்லிக்கு புறப் பட்டு சென்றார். மாநில தலை வர்கள் அவ்வப்போது தேசிய தலைவர்களை சந்திப்பது வழக்கம் தான் என்றாலும், கூட்டணியில் पटना கட்சிகள் இடம் பெறாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர் பாக ஆலோ சிப் பதற் கானநயி னார் நாகேந் திரனின் திடீர் டெல்லி பயணம் அரசி யல் வட் டாரங்களில் பேசு பொரு ளானது. அந்தவகையில் டெல்லி சென்ற நயினார் நாகேந் திரன் அங்கு மத் திய உள் துறை அமைச் சர் அமித் ஷா, மத்திய சுகா தா ரத் துறை அமைச் சர் ஜே.பி.நட்டா, பாஜக மாநில தேர் தல் ஒருங் கிணைப்பாளர் பைஜ யிந்த் பாண்டா உள்ளிட்ட பாஜக தேசிய தலை வர் களை சந் தித்து பேசி னார். இந்த சந்திப்பில் வரவி ருக்கும் சட்டப்பேரவை தேர் தலில் பாஜக வுக் கான தொகுதி பங் கீடு கள் குறித்தும். கூட்ட ணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. அதேபோல் கூட்டணி தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் குழு அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் தமி ழகம் வரவுள்ளார். அதற்குள் கூட்டணி விவகாரங்கள் குறித்து பேசி, இந்த மாத இறு திக்குள் கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க டெல்லி தலைவர்கள் முடிவு செய்யவே இந்த ஆலோசனை நடைபெ ற்றதாக கூறப்படுகிறது. அந்தவகையில் அமித் ஷா தமிழகம் வரும்போது கூட்டணி இறுதி செய்யப் பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.