RNI No TNTAM/25/A3928

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

சென்னை,டிச. அதிமு கவில் இருந்து நீக்கப் பட்ட மூத்த நிர்வாகியும். முன்னாள் அமைச்சரு மான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவு விடம் கடிதத்தை வழங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழ னிசாமிக்கும். முன்னாள் அமைச்சர் கோட்டையனுக்கும் அதி முகவை ஒன்றிணைப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து கே.ஏ.செங் கோட்டையன், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் செங் கோட்டையன் இணைய உள்ளதாகதகவல்கள் வெளியானது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் இருந்து பதவியில் ராஜினாமா செய்வ தாக சபாநாயகர் அப் பாவுவிடம் கடிதத்தை வழங்கினார். முன்னதாக செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “ஐம்பது ஆண் டுகால உழைப்பிற்கு அதிமுகவின் உறுப் பினர் பதவியில் இருந்து நீக்கிபரிசு கொடுத் துள்ளனர்” என வருத்தம் தெரிவித்திருந்தார்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…