RNI No TNTAM/25/A3928

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தமிழ்நாட்டின் பொருளார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக் கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனை வோர் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறி முகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் வரை 25 சதவீதம் (அதிகபட் சமாக ரூ.2.00 இலட்சம் வரை) மானியத்துடன் கூடிய வங்கிக் கடனு தவி வழங்குவதோடு. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில் நுட்ப மற்றும் சந்தை படுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவி களும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பய ன்பெற பெண்கள் மட் டுமேதகுதியானவர்கள் ஆவார்கள். குறைந்தப ட்ச வயது 18 முதல் அதி கபட்ச வயது 55 வரை நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் மக்கும் பொருட்கள் தயாரிப்பு, விவசாய உற் பத்தி கழிவுகளில் (தவுடு. வைக்கோல்) இருந்து பொருட்கள் தயாரித்தல், தென்னை நார்மூலம் தயரிக்கப்படும் செடி வளர்க்கும் தொட்டிகள், காகித கழிவுகளிலிருந்து பென்சில் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன் கள் தயாரிப்பு. கண்ணாடி ஒவியம், கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு, பட்டு நூல் அணிகலன் தயாரிப்பு குழந்தைகள் பராமரிப்பு நிலையம், வீட்டில் தயார் செய்யும் உணவுபொருட்கள். யோக நிலையம். வளர் ப்பு பிராணி பராமரிப்பும் நிலையம், உடற்பயிற்சி நிலையம், சலவை நிலை யங்கள், மணப்பெண் அலங்கார நிலையம், மெகந்தி மற்றும் டாட்டு நிலையம், சத்து மாவு உருண்டைகள் தயா ரிப்பு, சத்து மாவு சார்ந்த பேக்கரி உணவுபொரு ட்கள் தயாரிப்பு.தானிய வகைகளிலிருந்து தயார் செய்யும் ஐஸ்கிரிம், எலுமிச்சை எண்ணெய் தயாரிப்பு, வெட்டி வேர் எண்ணெய் தயாரிப்பு உள்ளிட்ட தொழில் களுக்கு முன்னுரிமை அளித்து மானியத்து டன்கூடிய வங்கிக் கடன் பெற்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு ள்ளது. எனவே, இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வ முள்ள பெண்கள் உரிய ஆவணங்களான புகைப் படம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை விலைப் புள்ளி பட்டியலுடன் www.msmeonline. tn.gov.in என்ற இணை யதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறும், கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், அரி யலூர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, கேட்டுக் கொண்டுள்ளார்கள் தொடர்பு கொள்ளுமாறும் செய்தி வெளியீடு:-செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…