RNI No TNTAM/25/A3928

தாராபுரத்தில் அரசு கல்லூரி விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா .தமிழக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு.

தாராபுரத்தில் அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் அரசு தொழிற்பயிற்சி மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு..

தாராபுரம், பிப் 11-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட ஐ.டி.ஐ கார்னர் அருகே அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது இந்த கல்லூரியில் நேற்று 10.02.2026 காலை சுமார் 11 மணியளவில் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் சுமார் 177 மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, “உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ்” விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.இதில் அரசு கல்லூரி முதல்வர் திருமதி புஷ்ப லதா தலைமையில், கல்லூரி கல்வி மேம்பாட்டுதுறை தலைவர் அரிமா கோபாலகிருஷ்ணன், தமிழக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர்களின் முன்னிலையில், மடிக்கணினி வழங்கப்பட்டது. மேலும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் சுமார் 187 மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கினர் இந்நிகழ்ச்சியில் திமுக கட்சியின் மாவட்ட வழக்கறிஞர் செல்வராஜ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…