RNI No TNTAM/25/A3928

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 95-ஆவது பிறந்தநாள் விழா, திருவுருவப் படத்திறப்பு விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ஆகியவை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றன.விழாவுக்குத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் மாவட்டச் செயலாளர் கதிர் கணேசன் வரவேற்புரை வழங்கினார். பேரமைப்பின் தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செம்மொழிச் செம்மல் முனைவர் க. இராமசாமி முன்னிலை வகித்தார்.டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவப் படத்தை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சி. குமரன் திறந்து வைத்தார். தொடர்ந்து, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.விழாவில், அரியலூர் நகரக் காவல் நிலைய ஆய்வாளர் இரா. வெங்கடேசன், தலைமை மருத்துவர் என். இரமேஷ், நிலைய மருத்துவ அலுவலர் க. கொளஞ்சிநாதன், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் பொருளாளர் கொ.வி. புகழேந்தி, அமைப்புச் செயலாளர் அ. நல்லப்பன், துணைத் தலைவர் புலவர் சி. இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மேலும், தொழிலதிபர் ஏ.ஆர். அக்பர் ஷெரிப், எழுத்தாளர் சோபனா பள்ளிச்செல்வன், வி. மங்கையர்க்கரசி, த. செந்தில்குமார், கவிஞர் க. அன்புச்சித்திரன், தமிழ்க்களம் த. இளவரசன், க. சகானா காமராஜ், கவிஞரும் எழுத்தாளரும் பொறியாளருமான தி. அறிவானந்தம், நா. ராஜேஸ்வரி உள்ளிட்ட தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் சாதனைகள், கல்வியின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அவர் கண்ட கனவுகள் ஆகியவை நினைவுகூரப்பட்டன.நிகழ்ச்சியின் நிறைவில், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் இணைச் செயலாளர் அறிவுஜீவா வெ. செல்லபாண்டியன் நன்றியுரை வழங்கினார்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…