
*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை நிற தொட்டிகளில் வழங்க வேண்டும் – ஒரு வார காலக் கெடு விதிப்பு – தவறினால் அபராதம்; தரம் பிரிக்கப்படாத கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது!நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து தேநீரகங்கள் (Tea Shops), கஃபேக்கள் (Cafés), உணவகங்கள் (Restaurants) மற்றும் சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட உணவு விற்பனை நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வழங்குவது கட்டாயமாகும்.இதனை நடைமுறைப்படுத்துவதற்காக, இச்செய்தி வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது.இந்தக் கால அவகாசத்திற்குள் அனைத்து நிறுவனங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.மேலும், சாலையோரங்களில் செயல்படும் அனைத்து தேநீரகங்கள் மற்றும் உணவகங்களும் தங்களது கடைகளின் முன்புறத்தில் பொதுமக்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் எளிதில் தெரியும்படி பச்சை நிறத் தொட்டியில் மக்கும் குப்பைகளையும், சிவப்பு நிறத் தொட்டியில் மக்காத குப்பைகளையும் சேகரித்து வைப்பது கட்டாயமாகும். இத்தொட்டிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஒன்றுடன் ஒன்று கலக்காத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.ஒரு வார கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் குப்பைகளைத் தரம் பிரிக்காமல் வழங்கும் நிறுவனங்கள் மீது மாநகராட்சி விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும். மேலும், தரம் பிரிக்கப்படாத குப்பைகள் மாநகராட்சியால் சேகரிக்கப்பட மாட்டாது. இதுதொடர்பாக மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே, நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து தேநீரகங்கள், கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் சாலையோர உணவு விற்பனை நிறுவனங்களின் உரிமையாளர்கள், மாநகராட்சியின் இந்த அறிவுறுத்தலைக் கட்டாயம் பின்பற்றி, நகரின் தூய்மையைப் பாதுகாக்க முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தூய்மையான நாகர்கோவில் மாநகரத்தை உருவாக்குவது அனைவரின் பொறுப்பாகும்.ஆணையாளர்நாகர்கோவில் மாநகராட்சி