
அரியலூர் – ஏழைகள் திருப்பதியான கலியுத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 2ம் சனிக்கிழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் காலாண்டு விடுமுறை என்பதால் குவியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது இக்கோவில் ஏழைகளின் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்பட்டுவருகின்றது.இக்கோவில் அரியலூர் மட்டும் இல்லாமல் தஞ்சாவூர், சேலம், ஆத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கும்பகோணம்,கள்ளக்குறிச்சி, திட்டக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசித்திபெற்ற கோவில் ஆகும்.இந்நிலையில் இன்று புரட்டாசியில் 2ம் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் கோவிந்தா கோவிந்தா என்ற பக்த கோஷங்களும் அவர்கள் பெருமாளை வழிபட்டனர் பெருமாளுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரங்கள் நடைபெற்றது பக்தர்கள் வசதிக்காக அரியலூரில் இருந்து கோவிலுக்கு ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.பொதுமக்களுக்கு ஏராளமான பக்தர்கள் தண்ணீர் மற்றும் பிரசாதம் சாத வகைகள் வழங்கி வருகின்றனர்