




திருப்பூர் மாவட்ட காவல்துறை
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கை
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சிரிஷ்டி சிங்.இ.கா.ப.,
அவர்களின் உத்தரவின்பேரில், காவல் உட்கோட்டங்கள் வாரியாக போக்குவரத்து காவல்
ஆய்வாளர் தலைமையில், விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகள் கண்டறியப்பட்டு,
ஒரு வார காலத்திற்கு தினமும் ஒரு இடம் என தேர்வு செய்து காலை மற்றும் மாலை
நேரங்களில் தீவிர வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலை விதிகளை முறையாகப் பின்பற்றும் வாகன ஓட்டிகளை சாக்லேட் மற்றும்
மலர் வழங்கி பாராட்டி ஊக்குவித்தும், விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு உரிய
அறிவுரைகள் வழங்கியும், அவர்களைக் கொண்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு
பதாகைகளை ஏந்தச் செய்து, அவர்களை வைத்தே பொதுமக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.