
ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரியAE கையும் களவுமாக சிக்கினார்: திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை*திருப்பூரில் 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரியAE கையும் களவுமாக சிக்கினார்: திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை*திருப்பூரில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி மின் பொறியாளரை (AE) லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.*திருப்பூர் மின் பகிர்மான வட்டம், அவிநாசி கோட்டத்திற்குட்பட்ட தெக்கலூரில் (கிழக்கு) மின் வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக இசக்கிமுத்து என்பவர் பணியாற்றி வந்தார்.இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக விண்ணப்பித்திருந்தார். அதற்கு மின் இணைப்பு வழங்க உதவி பொறியாளர் இசக்கிமுத்து ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முதற்கட்டமாக ரூ.15 ஆயிரம் கொடுப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த நபர் இன்று உதவி பொறியாளர் இசக்கிமுத்துவிடம் வழங்கினார்.அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாகப் பாய்ந்து, ரூ.15 ஆயிரம் லஞ்சப் பணத்தை வாங்கிய இசக்கிமுத்துவை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இந்த அதிரடி கைது நடவடிக்கையால் மின்வாரிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதேபோன்று திருப்பூரில் உள்ள அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்
மாலை பார்வை எக்ஸ்பிரஸ் ஆசிரியர்& வெளியீட்டாளர் M. சரவணகுமார்