
திருப்பூர், ஆக. 20:*ரேஷன் கடையில் அநாகரிக மிரட்டல்: அரிசி குறைப்பு, மொபைல் மெசேஜில் மோசடி – திருப்பூரில் பரபரப்பு!**திருப்பூர் அவினாசி சாலை காந்தி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நுகர்வோருக்கு உரிய அரிசியை வழங்காமல் முறைகேடு செய்ததோடு, தட்டிக்கேட்டவரை விற்பனையாளர் அநாகரிகமாக மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.*குறைத்து வழங்கப்பட்ட அரிசி:திருப்பூர் வளர்மதி கூட்டுறவு சொசைட்டிக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள குமார் நகர்-1 ரேஷன் கடையில் (எண்: 32 BB 0007 PN) நுகர்வோர் ஒருவர் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். அவருக்கு வழக்கமாக வழங்கப்படும் 20 கிலோ புழுங்கல் அரிசிக்கு பதிலாக, 10 கிலோ மட்டுமே வழங்கப்படும் என விற்பனையாளர் கூறியுள்ளார்.மொபைல் மெசேஜில் அதிர்ச்சி:இதுகுறித்து நுகர்வோர் கேள்வி எழுப்பியபோது, “நீ எங்கு யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்துக்கொள்” என விற்பனையாளர் அநாகரிகமாகப் பேசியுள்ளார். வாக்குவாதத்தின் முடிவில் 15 கிலோ புழுங்கல் அரிசியும், 5 கிலோ பச்சரிசியும் வழங்கப்பட்டது. ஆனால், நுகர்வோரின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் (SMS) 20 கிலோ புழுங்கல் அரிசி வழங்கப்பட்டதாகப் பதிவாகியிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மீண்டும் கேட்டபோது விற்பனையாளர் முறையான பதிலளிக்காமல் அலட்சியமாகப் பேசியுள்ளார்.முதியவர்களிடம் ஏமாற்று வேலை:மேலும், அதே கடையில் வயதான முதிய பெண்மணி ஒருவரிடம் ரேஷன் கார்டைப் பெற்று, அனைத்துப் பொருட்களையும் ஸ்கேன் செய்துவிட்டு, அவருக்கு எந்தப் பொருட்களும் வழங்காமல் முறைகேடு செய்துள்ளதாகவும் அந்த நுகர்வோர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.கட்டாயப் பொருட்கள் டார்ச்சர்:கடுகு, பொட்டுகடலை உள்ளிட்ட கட்டுப்பாடற்ற மளிகைப் பொருட்களைக் கட்டாயப்படுத்தி வழங்கி, நுகர்வோரை டார்ச்சர் செய்யும் அவலமும் இங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை:இதுகுறித்து திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் அளித்துள்ளார். எனவே, பொதுமக்களை அநாகரிகமாக நடத்திய விற்பனையாளர் மீது உரிய விசாரணை நடத்தி, இந்த ரேஷன் கடை முறைகேடுகள் குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாலை பார்வை எக்ஸ்பிரஸ் ஆசிரியர்M. சரவணகுமார்