RNI No TNTAM/25/A3928

தூத்துக்குடியில் ஊடுருவ முயன்ற 12பேர் சிக்கினர் – டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல்!*’

*தூத்துக்குடியில் ஊடுருவ முயன்ற 12பேர் சிக்கினர் – டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல்!*’சாகர் கவாச்’ கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையின் போது, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் டம்மி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 12 பேரை கடலோரக் காவல் படை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் ‘சாகர் கவாச்’ கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையின் போது, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மாதிரி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 12 பேரை கடலோரக் காவல் படை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.கடல் வழியாகத் தீவிரவாதிகள் மற்றும் சட்டவிரோத நபர்கள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காகச் ‘சாகர் கவாச்’ எனப்படும் இரண்டு நாள் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை ஜூலை 23, 2026 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தொடங்கியது.இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி கடலோரக் காவல் படை ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடலிலும் கடற்கரையிலும் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஒத்திகையின் எதிரணியாகச் செயல்பட்டு ஊடுருவ முயன்ற வான் தீவு தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சந்தேகப்படும்படியாக இருந்த 4 பேர் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் பதுங்கியிருந்த 4 பேர் உட்பட மொத்தம் 12 பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 4 மாதிரி வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…