RNI No TNTAM/25/A3928

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள் விழா: திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. சங்கர் அறிக்கை

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள் விழா: திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. சங்கர் அறிக்கை​திருப்பூர், ஜூலை 17- தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இது குறித்து திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ​கட்சியின் பொதுச்செயலாளர் பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட முக்கிய ஆன்மீகத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. அதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற அழகுமலை முருகன் கோவிலில் பொதுச்செயலாளர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டி தங்கத்தேர் இழுத்து சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடைபெற உள்ளது. ​மேலும், மேற்கு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் ஆசிரமங்கள் மற்றும் பாதுகாப்பு மையங்களில் உள்ளவர்களுக்கு அருசுவை உணவுடன் கூடிய சிறப்பான அன்னதானம் வழங்கப்பட உள்ளது. சமூகத்தின் நலனுக்காக உழைக்கும் தூய்மைப் பணியாளர்களைக் கௌரவிக்கும் விதமாக, அவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கு மாவட்ட த.வெ.க. சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவினாசி அலுவலகம் அருகே விலையில்லா உணவகம் திறக்கப்பட உள்ளது. ​பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழாவை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். இந்தக்கொண்டாட்டங்களின் போதும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகளின் போதும் பொதுமக்களுக்கோ அல்லது போக்குவரத்திற்கோ எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் விழாவினை நடத்த வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…