
*திருநெல்வேலி மாவட்டம்வீரவநல்லூர் இரட்டைக் கொலை வழக்கு: போலீசாரை அறிவாளால் தாக்கியதால் துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் கைது செய்தனர்!* வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்தில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.இவ்வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினருக்கு, குற்றவாளி கிருஷ்ணன் என்கிற அஜித் (28) வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 80 அடி கால்வாய் அருகிலுள்ள வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்துகாவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அவரை கைது செய்ய முயன்றனர்.அப்போது, குற்றவாளி கிருஷ்ணன் @ அஜித் தன்னிடமிருந்த அரிவாளால் காவல்துறையினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு காவலரின் இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து குற்றவாளி மீண்டும் தாக்க முயன்றதால், தற்காப்பு நடவடிக்கையாக காவல்துறையினர் துப்பாக்கியால் ஒரு முறை சுட்டனர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளியின் இடது காலில் குண்டுக்காயம் ஏற்பட்டது. காயமடைந்த குற்றவாளி மற்றும் காவலர் இருவரும் உடனடியாக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா. சாஸ்திரி, ஐ.பி.எஸ்., மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த காவலர் மற்றும் குற்றவாளியின் உடல்நிலையை பார்வையிட்டு, உரிய சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்தார்.இச்சம்பவம் தொடர்பாக சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.