RNI No TNTAM/25/A3928

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் மற்றும் இ சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

விருதுநகர் மாவட்டம்தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும்இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.——-விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் தம்மநாயக்கன்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.07.2026) ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் கடன் விவரங்கள், உரிய தேதியில் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டி சலுகைகள், மானியங்கள், விவசாய நகைக் கடன்கள் உள்ளிட்டவை குறித்தும், சங்கத்தின் கணக்குகள், தணிக்கை விவரங்கள், கணிணி மயமாக்கல் பணிகள் குறித்தும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு விண்ணப்பங்கள் உரிய காலக் கெடுவுக்குள் பரிசீலிக்கப்படுகிறதா, சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்படுகிறதா, பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, கணினி மற்றும் இணைய வசதிகள் முறையாக செயல்படுகிறதா, பணியாளர்களின் சேவை தரம் திருப்திகரமாக உள்ளதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், பொதுமக்கள் சிரமமின்றி அரசு சேவைகளைப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்த ஆய்வின் போது சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், விருதுநகர்–செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்விருதுநகர்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…