
திருப்பூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டி, திருப்பூரைச் சேர்ந்த த.வெ.க விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் R. விஜய் வடிவேலு அவர்கள் தொடர்ந்து பல ஆன்மீக வேண்டுதல்களை மேற்கொண்டு வந்தார்.தனது பிரார்த்தனையின் ஒரு பகுதியாக, கடந்த மூன்று ஆண்டுகளாகப் பழனிக்குப் பாதயாத்திரை சென்று அழகு குத்தி, பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வந்துள்ளார். மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மூன்று ஆண்டுகளாகப் பெருவழி பாதயாத்திரை சென்றும், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் மாலை அணிவித்தும் தளபதி அவர்கள் முதலமைச்சராக வேண்டும் என்று தொடர்ந்து வேண்டிக் கொண்டார்.தற்போது தளபதி ச. ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அவரது பிரார்த்தனை நிறைவேறியதைக் கொண்டாடும் விதமாக, R. விஜய் வடிவேலு அவர்கள் பழனிக்குச் சென்று மொட்டையடித்துத் தனது நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வு, த.வெ.க தொண்டர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலை பார்வை எக்ஸ்பிரஸ் M. சரவணகுமார் ஆசிரியர்& வெளியீட்டாளர் 9789571219