RNI No TNTAM/25/A3928

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!

*தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!*தூத்துக்குடி அருகே வாகைகுளம் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக அண்ணன், தம்பி ஆகிய இருவரைப் போலீசார் இன்று கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைகுளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன்கள் சுதாகர் (23) மற்றும் ராஜா (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, சுதாகர் மற்றும் ராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலைப்பார்வை எக்ஸ்பிரஸ் M. சரவணகுமார் ஆசிரியர் &வெளியிட்டார்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…