RNI No TNTAM/25/A3928

விஜய்க்கு மெச்சூரிட்டி இல்லை விலாசிய கர்நாடக துணை முதல்வர்

விஜய்க்கு ‘மெச்சூரிட்டி’ இல்லை.. விளாசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார்! கோபத்தின் பின்னணிதமிழக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் வெளியிட்டார். இந்த வேளையில் தவெக தலைவர் விஜயை டிகே சிவக்குமார் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர், ” விஜய் முதிர்ச்சியடையாத அரசியல்வாதி. அவருக்கு முதிர்ச்சி இல்லை” என்று காட்டமாக கூறினார். இந்த விமர்சனத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.இதுதொடர்பாக டிகே சிவக்குமார் கூறியதாவது: ”அரசியலில் விஜய்க்கு முதிர்ச்சி இல்லை. அவருக்கு மெச்சூரிட்டி இல்லை. விஜய் உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இருக்கலாம். அவ்வளவு தான். எங்கள் தான் அவருடன் இல்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தான் உள்ளது. இந்த கூட்டணி 3ல் இரண்டு பங்கு வென்று மெஜாரிட்டியை பிடிக்கும்” என்றார்.டிகே சிவக்குமாரின் இந்த பேட்டிக்கு பின்னணியில் விஜய் சொன்ன ஒரு வார்த்தை தான் உள்ளது. அதாவது விஜய் நேற்று நெல்லை, தூத்துக்குடியில் பரப்புரை செய்தார். அப்போது விஜய் பேசும்போது, ” திமுக கூட்டணியில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் ஓட்டு போட்டுக்கொள்ள மாட்டார்கள் போல் இருக்கிறது.திமுக தனது கூட்டணியில் காங்கிரஸை வைத்துள்ளது. சில கோடிகளை கொடுத்து அந்த கட்சியை திமுக தக்கவைத்துள்ளது. இருப்பினும் உண்மையான காங்கிரஸ் தமிழக வெற்றி கழக பக்கம் நிற்கிறது” என்று கூறினார்.விஜயின் இந்த கருத்து பற்றி கேள்வி எழுப்பியபோது தான் டிகே சிவக்குமார் அவரை கடுமையாக சாடி உள்ளார். விஜய் உடன் காங்கிரஸ் கட்சி இல்லை. வேண்டுமானாலும் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தவெகவுடன் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…