RNI No TNTAM/25/A3928

வனத்துறையை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் தேர்தல் புறக்கணிப்பு

வனத்துறையை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் குடியாத்தம் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்புஏப்ரல் 6 வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில்பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஆதரவு திரட்டிய விவசாய சங்கத்தினர் வேலூர் மாவட்டம் குடியாத்தம்,, 2026 சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் நிலையில் குடியாத்தம் ( தனி) தொகுதியில் மட்டும் தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது மேலும் தேர்தல் புறக்கணிப்புக்கு ஆதரவு கேட்டு விவசாய சங்கத்தினர் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கினர் மேலும் இதுகுறித்து விவசாய சங்கத்தினர் செய்தியாளிடம் கூறும் போது பேரணாம்பட்டு அடுத்த சாரங்கள் கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் யானை மிதித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார் அவரது மகன்கள் மோகன்பாபு மற்றும் சபரிஷ் மீது வனத்துறையினர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு முற்றிலும் பொய் வழக்கு என குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை அறிக்கை வழங்கப்பட்ட நிலையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் வனத்துறை அமைச்சர் ஆகியோரிடம் முறையிட்டும் அரசு வழக்கை திரும்ப பெற அறிவுறுத்திய நிலையில் வனத்துறையினர் இதுவரை வழக்கை வாபஸ் பெறாத நிலையில் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்தாத வனத்துறையை கண்டித்தும் விவசாயிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வரும் வனத்துறையை கண்டித்து குடியாத்தம் தொகுதியில் மட்டும் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் இது சம்பந்தமாக எந்த அதிகாரியும் தங்களிடம் பேசவில்லை எனவும் விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…