RNI No TNTAM/25/A3928

லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கைது!

🚨 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கைது!திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் (SSI) ராமகிருஷ்ணன், லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க பணம் கேட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீட்டிய திட்டத்தின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.புகார்தாரரிடம் இருந்து லஞ்சம் பெற்றபோது, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.இந்த சம்பவம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…