
குமரி. மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் அதிரடி.
விதிமீறலில் ஈடுபட்ட இரண்டு கல்குவாரி கள் மூடல்
கன்னியாகுமரி மாவட்டம் தோட்டியோடு பகுதியில் சட்டவிரோதமாக இயக்கப்பட்ட கல் குவாரிகள் மாவட்ட எஸ் பி யின் அதிரடி நடவடிக்கையால் மூடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் . அதன் தொடர்ச்சியாக இன்று தோட்டியோடு பகுதியில் சோதனை நடத்தியதில் இரண்டு கல்வாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டதை கண்டறிந்து அந்த இரண்டு கல்குவாரி களையும் மூட உத்தரவிட்டு உள்ளார். மேலும் சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரிகள் மீது சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக இயக்கப்படும் கல்குவாரிகள் தனது தொடர் நடவடிக்கை மூலம் மூடப்படும் என்று எச்சரித்தும் உள்ளார். சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயங்கினால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விதிமுறை மீறல்களில் ஈடுபடும் கல்குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்படும் போது முறையாக சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்து உள்ளார்.
இதனால் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் குமரி மாவட்டத்தில் இயங்குவது மாவட்ட எஸ் பி ஆல் தடுக்கப்படும் என்பது மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் தொடரும் என்பதை சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் வரவேற்று உள்ளனர்.