
திருப்பூர், ஜூலை 08:திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் தம்பதியரைத் தாக்கி நகை பறித்த வழக்கில், இரண்டு குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் தம்பதியரிடம் 6 1/2 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் (CJM) நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், காவல்துறையினர் சமர்ப்பித்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகளான மணியப்பன் மற்றும் சின்னமுத்து ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்பதையும், குற்றவாளிகள் எக்காலத்திலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும் இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்ட காவல்துறையினரின் இத்தகைய நேர்மையான மற்றும் துரிதமான புலனாய்வுப் பணிகள், பொதுமக்கள் மத்தியில் சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளின் இந்தச் செயல்பாட்டினைச் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
மாலை பார்வை எக்ஸ்பிரஸ் ஆசிரியர்& வெளியீட்டாளர் M. சரவணகுமார் 9789571219