RNI No TNTAM/25/A3928

ஆத்தூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி

கவுன்சிலருக்கு நியமன பதவி ஆணை! தலைவர் ஏ.கே. கமால்தீன் வழங்கினார்

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல், நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து அறிமுகப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, புதிய மாற்றுத்திறனாளி உறுப்பினர் நியமன விழா ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்றது.

ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.கே. கமால்தீன் தலைமையிலும், செயல் அலுவலர் எம். மகேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்வில், மாற்றுத்திறனாளி கவுன்சிலராக பாத்திமா முகம்மது ரியாஸ் நியமிக்கப்பட்டார்.

அவருக்கு நியமனப் பதவிக்கான பணி ஆணையை மன்றத் தலைவர் ஏ.கே. கமால்தீன் வழங்கி, சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…